Abcdefg Hijkalmn Opqrst Uvwxyz. இது ஒரு பெண்ணின் பெயர் என்றால் நம்ப முடிகிறதா?

abcகொலம்பியா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அடிக்கடி தனது பெயரை மாற்றும் வழக்கம் உடையவராக இருந்தார். தன்னுடைய பெயரில் உலகில் வேறு யாருமே இருக்கக்கூடாது என்று விரும்பும் அவர் கடைசியாக வைத்துள்ள பெயர் ஆங்கில எழுத்துக்களின் 26 எழுத்துக்கள். அதாவது அவரது முதல் பெயர்  Abcdefg Hijkalmn என்றும் இரண்டாவது பெயர் Opqrst Uvwxyz என்றும் மாற்றியுள்ளார். தனது முழுப்பெயரை கூப்பிட முடியாதவர்கள் தன்னை Abc என்று சுருக்கமாக கூப்பிடலாம் என கூறுகிறார்.

இதுகுறித்து அவர் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய பெயரில் உலகிலேயே நான் ஒருத்தி மட்டும்தான் இருக்க வேண்டும். அதனால்தான் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டிருந்தேன். இனி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பெயரை யாருக்கும் வைத்திருக்க மாட்டார்கள்’ என்று பெருமையாக கூறியுள்ளார் ஏபிசி.

சட்டப்பூர்வமாகத் தன் பெயரைப் பதிவு செய்து, அடையாள அட்டைப் பெறுவதற்காக தான் ஒரு வருடம் அரசு அதிகாரிகளிடம் வாதிட்டு போராடியதாகவும், இறுதியில் தனது பெயரை முறைப்படி பதிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இப்பொழுது அவர் இந்த புதிய பெயரிலேயே அவர் தனது அடையாள அட்டையையும் வாங்கிவிட்டார்.
றார் ஏபிசி. இதுவரை பல முறை பெயர்களை

Leave a Reply