சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு முதல் முறையாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் புதிதாக 12 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி கடந்து வராம் தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை இன்று முதல் தேர்தல் அதிகாரிகள் தொடங்கினர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் தொடங்கி வைத்தார்.