ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன் போன்ற டிஜிட்டல் பொழுதுபோக்குகளுக்கு அடிமை ஆனவர்கள், உலகெங்கும் நிரம்பி இருக்கிறார்கள். இப்படி அடிமை ஆனவர்களை மீட்டெடுக்க சீனாவில் உதயமாகியிருக்கிறது ஓர் அமைப்பு!
சீனாவின் பெய்ஜிங்கில் இயங்கி வரும் சைனீஸ் இண்டர்நெட் கேமிங் டிஸ்ஆர்டர் ரீஹேபிலிடேஷன் கேம்ப் (Chinese Internet Gaming Disorder rehabilitation camp) எனும் மறுவாழ்வு மையம், வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் அரும்பணியைச் செய்து வருகிறது. சீனா முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரம் இண்டெர்நெட் கஃபே இதுபோன்ற விளையாட்டுக்களுக்காக செயல்படுகிறது.
உலக அளவில் வீடியோ கேம் ‘அடிமை’களில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி, நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது சீனா. இந்த நாட்டில் இணையதளம் பயன்படுத்தும் 632 மில்லியன் மக்களில், 10% பேர் இணைய அடிமைகளாக இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. வீடியோ கேம்ஸ்களை விளையாடுவதன் மூலம் தங்கள் நேரத்தை இழப்பதுடன், அடுத்த தலைமுறையினர் ஒருவித மன அழுத்தத்துடன்தான் பிறப்பார்கள் என்றும் சீனாவின் மனிதவள மேம்பாட்டு மையம் ஆய்வில் தெரிவித்துள்ளது (இந்த வீடியோ கேம்ஸால் ஒரே ஒரு அனுகூலம் உண்டு! ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருந்த சீன மக்கள் தொகை கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்!).
இதையெல்லாம் கருத்தில்கொண்டு, உலகமெங்கிலும் உள்ள வீடியோ கேம்ஸ் அடிமைகளை மீட்டெடுக்கும் நோக்கின் முதல் முயற்சியாக, சீனாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த மறுவாழ்வு மையம். இதன் முக்கியத்துவம் அறிந்து, சீன அரசு இந்த மையத்துக்கு நிதியுதவி அளித்து ஊக்குவிக்கிறது. ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் முன்னணி புகைப்படக்காரர் பெர்னாண்டோ மொலரெஸ், இந்த சீன மறுவாழ்வு மையத்தைப் பற்றி டாக்குமென்டரி புகைப்படங்கள் எடுத்து, தன் வலைபக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் இவை பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தரப்படும் பயிற்சிகள்!
வீடியோ கேம்ஸ் அடிமைகளை மீட்கும் பணியின் முதல் நிலை, அவர்களை ‘கொஞ்ச’ நேரம் வீடியோ கேம்ஸ் விளையாட விடுவதுதான். பின் படிப்படியாக அவர்களை அதிலிருந்து விடுவித்து, மனரீதியான ஆலோசனைகள் மற்றும் ராணுவ அடிப்படையிலான உடற்பயிற்சிகளுக்கு அவர்களை உட்படுத்துகிறார்கள். கடைசிகட்ட பயிற்சியின்போது ராணுவ ஆடைகளை அணிந்து கிட்டத்தட்ட ராணுவ வீரர்கள் செய்யும் உடற்பயிற்சிகளை இவர்கள் தினசரி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் முடிந்த பிறகு அவர்களுக்கு தலையணையை கொடுத்து தூங்க வைப்பார்கள்.
அடுத்ததாக இவர்கள் தங்களுடன் பயிற்சி எடுக்கும் சக தோழர்களுடன் இரண்டு மணி நேரம் குழுவாக இணைந்து பேசிக் கொள்வார்கள். கொஞ்ச நேரம் படிப்பது, கொஞ்ச நேரம் விளையாடுவது போக, தியானமும் செய்வார்கள். அனைத்துப் பயிற்சிகளும் முடிந்து திரும்பும்போது, முழுக்க முழுக்க வீடியோ கேம்ஸ்களை மறந்து, வேறொரு உலகத்தினுள் நுழைந்திருப்பார்கள். வீடியோ கேம்ஸ் என்று யாரேனும் சொன்னால்கூட, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்களாம்!
இதைப் பார்த்து, அமெரிக்காவும் இதுபோன்ற வீடியோ கேம்ஸ் அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடித்துள்ளது.
இந்தியாவில்..?!