சுற்றிப்பார்க்க வந்தவருக்கு மெழுகுச்சிலை: பாபா ராம்தேவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற மெழுகு சிலை அருங்காட்சியகமான மேடம் துஷாட்ஸை சுற்றிப் பார்க்க சென்ற பாபா ராம்தேவுக்கு மெழுகுச்சிலை அமைக்க அருங்காட்சியினர் முடிவு செய்துள்ளது பாபாவின் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.
லண்டன் மெழுகுசிலை அருங்காட்சியகத்திற்கு சமீபத்தில் பார்வையிட சென்ற பாப குரு ராம் தேவ் அனைத்து சிலைகளையும் கண்டு ரசித்தார். அப்போது ராம்தேவின் சிலையையும் அங்கு வைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக அருங்காட்சியக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பெரும்பாலும் கொடுக்கும் விருக்ஷானா ஆசன போஸ் கொடுத்தார். சிலைக்கான அளவுகளை பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களுடன் பாபா ராம்தேவ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த மியூசியத்தில் சச்சின் டெண்டுல்கர், ஷாரூக்கான், அமிதாப்பச்சன், பிரதமர் மோடி உள்பட பல இந்திய விவிஐபிக்களின் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது