ஜனாதிபதி வேட்பாளர் யார்? முடிவு செய்ய குழுக்கள் அமைத்த கட்சிகள்
இந்திய ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கைய நாயுடு ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள பாஜக, இந்த குழு பரிந்துரை செய்யும் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த திட்டமிட்டுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் பத்துபேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஆளும் கட்சி சார்பில் முதலில் வேட்பாளரை வெளியிட்டவுடன் அந்த வேட்பாளரை ஆதரிப்பாதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்தவுடன் தங்கள் சார்பில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.