ஆசிரியர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை

download (2)

இங்கிலாந்தில் ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைகளிலேயே அதிக வாய்ப்புகளையும், சலுகைகளையும் தருவது காமன்வெல்த் உதவித்தொகை எனலாம். அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயிற்றுவித்தல் தொடர்பாக ஆய்வு, திறன் மேம்பாடு போன்றவற்றுக்காக இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாத பயணம் செல்வதற்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Commonwealth Academic Staff Fellowship என்ற பெயரில் வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, இங்கிலாந்தில் ஆய்வைத் தொடங்குவதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். மூன்று மாத காலத்துக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

www.cscuk.dfid.gov.uk என்ற இணைய முகவரியில் EAS முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.

Leave a Reply