துரைமுருகன் தலைமையில் போட்டி சட்டசபை கூட்டம். பெரும் பரபரப்பு

துரைமுருகன் தலைமையில் போட்டி சட்டசபை கூட்டம். பெரும் பரபரப்பு

durai muruganநேற்று முன் தினம் தமிழக சட்டசபையில் கூச்சல், குழப்பம் செய்ததாக திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேர்களை சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தியதால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து துரைமுருகன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த போது, “தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் தங்களது நியாயமான வாதங்களை முன்வைக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில்தான் போட்டி கூட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டி கூட்டத்தின் மூலம் சட்டப்பேரவையில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை திமுக உறுப்பினர்கள் தெரிவிப்பர். இந்த கூட்டத்தின் நோக்கம் அது மட்டுமே. மக்கள் பிரச்சினைகளை பேசுவதைத் தவிர யாரையும் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். கண்ணியத்துடன் கூட்டம் நடக்க வேண்டும். இப்போது நாம் நடத்தும் மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை மக்கள் நேரலையில் காண்பர். திமுக ஆட்சி அடைந்தவுடன் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படும்” என்று கூறினார்.

இந்த போட்டி கூட்டத்தில் சபாநாயகராக துரைமுருகன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply