மதக்கலவரங்களை தூண்டு வகையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.
சென்ற மாதம் 5ஆம் தேதி, இந்து தர்ம பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும், அவர் பேசிய காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக பரவுவதால் மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை கேலி செய்ததாகவும் இவருடைய பேச்சு தமிழகத்தில் ஒற்றுமையாக இருக்கும் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களை கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும், அதனால் இந்திய தண்டனை சட்டத்தின்படி இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.