சென்னை கல்லூரி மாணவர்கள் – நடத்துனர் மோதல். போக்குவரத்து பாதிப்பு.

 

சென்னையில் நேற்று பேருந்து நடத்துனருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நடந்த மோதலில் நடத்துனர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை சென்று கொண்டிருந்த நகரப்பேருந்து ஒன்றில் ராயப்பேட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறி படிகளில் தொங்கியபடியும், பாட்டு பாடிக்கொண்டு வந்தனர். இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருந்ததால் பேருந்து நடத்துனர் அந்த மாணவர்களை கண்டித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பாம்குரோவ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் நடத்துனரை பெரிய கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நடத்துனர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதனை கேள்விப்பட்ட அந்த வழியே வந்த பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடத்துனரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் ஆற்காடு சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Leave a Reply