இனிமேல் காலி பஸ்ஸை ஓட்ட முடியாது: கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு கிடுக்கிப்பிடி
போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பேருந்துகளிலும் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயை அதிகரிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன