திமுகவுடன் கூட்டணி. சோனியா காந்தியிடம் நேரில் வலியுறுத்திய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் நான்கு ஆண்டுகளில் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. நேற்று முன் தினம் அதிமுக பொதுக்குழுவை கூட்டியுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்பதை நோக்கி பார்வையை வைத்துள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிகவுக்கு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், பரிசீலனை செய்வதாக சோனியா காந்தியும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று நேரில் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று முன்தினம் சோனியா காந்தி வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக தேர்தல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததோடு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.