திப்புசுல்தான் – லலித்மோடி குறித்து இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் பேசுவாரா?

திப்புசுல்தான் – லலித்மோடி குறித்து இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் பேசுவாரா?
modi1
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் திப்பு சுல்தானின் மோதிரத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் லலித் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது

உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆஸம்கான் என்பவர் இதுகுறித்து கூறியபோது, “திப்பு சுல்தானின் மோதிரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மோதிரத்தில் ராம பிரான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த மோதிரத்தை மீட்டு, திப்பு சுல்தான் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பா.ஜ.க ஆதரவாளர்களிடம் பிரதமர் காண்பிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது, “செல்பிக்கள், புகைப்படங்கள், மோடி என்கிற பிராண்டை விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றைத் தாண்டி, மோடியின் பிரிட்டன் பயணம் சிறிய அளவிலாவது சாதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். லண்டனுக்கு தப்பி ஓடிய கருப்புப் பண ஏற்றுமதியாளர் லலித் மோடியை, நாடு கடத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பிரிட்டன் நாட்டு குடிமகன் இல்லாத யாரையும் உரிய நாட்டிடம் ஒப்படைப்பதற்கு பிரிட்டன் நாட்டின் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சட்ட நுணுக்கங்களைக் காட்டி பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வராவிட்டால், சின்ன மோடிக்கு பெரிய மோடி உதவுவதாகவே கருதப்படும்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply