காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. விஜயதரிணிக்கு மீண்டும் வாய்ப்பு
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 இடங்கள் ஒதுக்கியது. இந்த 41 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து பின்னர் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலோடு தற்போது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர்.
இதன்படி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் சமீபத்தில் மோதிய விஜயதாரிணி உள்பட 33 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. திருத்தணி – ஏ.ஜி.சிதம்பரம்
2. அம்பத்தூர் – ஹசன் மவுலானா
3. ராயபுரம் – ஆர்.மனோ
4. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்தினம்
5. ஓசூர் – கே.கோபிநாத்
6. கலசப்பாக்கம் – செங்கம் ஜி.குமார்
7. ஆத்தூர் (தனி) – எஸ்.கே.அர்த்தனாரி
8. சங்ககிரி – டி.கே.ராஜேஸ்வரன்
9. நாமக்கல் – டாக்டர் ஆர்.செழியன்
10. தாராபுரம் (தனி) – வி.எஸ்.காளிமுத்து
11. கோபிசெட்டிப்பாளையம் – எஸ்.வி.சரவணன்
12. உதகமண்டலம் – ஆர்.கணேஷ்
13. சூளூர் – வி.எம்.சி.மனோகரன்
14. கோவை (தெற்கு) – மயுரா எஸ்.ஜெயக்குமார்
15. வேடச்சந்தூர் – ஆர்.சிவசக்திவேல் கவுண்டர்
16. கரூர் – கே.சுப்பிரமணியம்
17. திருச்சி (கிழக்கு) – ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ்
18. முசிறி – எஸ்.விஜயா பாபு
19. ஜெயங்கொண்டம் – ஜி.ராஜேந்திரன்
20. காட்டுமன்னார்கோவில் (தனி) – டாக்டர் கே.ஐ.மணிரத்தினம்
21. வேதாரண்யம் – பி.வி. ராஜேந்திரன்
22. நன்னிலம் – எஸ்.எம்.பி. துரைவேலன்
23. பாபநாசம் – டி.ஆர். லோகநாதன்
24. பட்டுக்கோட்டை – கே.மகேந்திரன்
25. அறந்தாங்கி – எஸ்.டி. ராமச்சந்திரன்
26. காரைக்குடி – கே.ஆர். ராமசாமி
27. மதுரை (வடக்கு) – வி.கார்த்திகேயன்
28. திருமங்கலம் – ஆர்.ஜெயராம்
29. முதுகுளத்தூர் -எஸ்.பாண்டி
30. தென்காசி – பழனி நாடார்
31. நாங்குநேரி – எச்.வசந்தகுமார்
32. குளச்சல் – ஜெ.ஜி. பிரின்ஸ்
33. விளவங்கோடு – விஜயதரணி
மீதமுள்ள 8 தொகுதிகளான மயிலாப்பூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், செய்யார், காங்கேயம், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அப்படியே இந்த செய்தியையும் படித்துவிடுங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் முழுவிபரம்