சீன தூதரை சந்தித்தாரா ராகுல்காந்தி பெரும் பரபரப்பு
இந்திய, சீன எல்லையில் பதட்டம் அதிகரித்து போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சீனத் தூதரைச் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை காங்கிரஸ் தலைமை மறுத்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதர் லூ சவோஹூய்யை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் இப்போதுதான் முதல் முறை சந்தித்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இப்படி பல முறை சந்தித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் சாலை அமைக்கும் முயற்சி காரணமாக சிக்கிம் இந்திய சீன எல்லையில் இரு நாடுகளையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது.
சர்ச்சைக்கு ஆளாகியுள்ள இந்த தகவலை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. அதே சமயத்தில், சீனத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இருவரும் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் பற்றி பேசியதாக கூறப்பட்டுள்ளது.