பிரிந்து சென்ற கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைமை ரகசிய பேச்சு?

congressகாங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியி\ன் தலைமை தீவிர முயற்சியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கு பின் நடந்த இடைத்தேர்தல்களிலும், மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றது. இதனால் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வர தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதன் முதல்கட்டமாக சரத்பவார், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, ஜி.கே.வாசன் ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலமைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே போல் தந்தை மறைவிற்கு பின் தனக்கு முதல்வர் பதவி கொடுக்காததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெரும் செல்வாக்குடன் திகழ்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராவதற்கு எதிர்ப்புத் தெரி வித்து அக்கட்சியிலிருந்து பிரிந்து  தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி னார் சரத்பவாரும் மகாராஷ்டிரத்தில் செல்வாக்கு பெற்று விளங்குகிறார்.

எனவே பிரிந்து சென்ற இந்த நான்கு தலைவர்களையும் மீண்டும் தாய் கட்சிக்கு இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், பாஜக அரசை எதிர்க்க பிரிந்தவர்கள் கூடினால்தான் முடியும் என்ற உண்மையை காங்கிரஸ் கட்சி தற்போதுதான் புரிந்து கொண்டுள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply