ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம் கிடைத்துள்ளது. குஷ்பு

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம் கிடைத்துள்ளது. குஷ்பு

kushbooஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முன்பைவிட தற்போது அதிக விளம்பரம் கிடைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் பிரபல நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் தங்கியிருந்து 10 நாட்கள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவரை நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழக காங்கிரஸ் தலைவர் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று அனைவருக்கும் தெரியும். இது காங்கிரஸ் கட்சியின் பெயரினை கெடுக்கும் முயற்சியாகும். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.  எங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு கெடுதலே விளையும்.

முன்பைவிட தற்போது காங்கிரசுக்கு அதிக விளம்பரம் கிடைத்துள்ளது. இது ஒரு நல்வழி போரட்டத்தின் வெற்றியாகவே கருதுகிறோம். இளங்கோவனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நற்பெயர் விளைந்துள்ளது. மக்களுக்கும் காங்கிரஸ் மீதும், இளங்கோவன் மீதும் ஒரு புத்துணர்ச்சி மிக்க நம்பிக்கை வந்திருக்கிறது. இனியெல்லாம் ஜெயமே” என்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ”ஜெயலலிதாவால் நான் மதுரையில் காத்துக்கிடக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் துவள மாட்டேன். 4 ஆண்டுகளில் ஜெயலலிதா அறிவித்தது எதுவும் தமிழ்நாட்டில் சரிவர இயங்கவில்லை. தமிழ்நாட்டை தலைகிழாக புரட்டிபோட்டதை போல் வீர வசனங்கள் பேசினால் போதாது. ஏழை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சட்டசபை சரிவர இயங்கவில்லை. அவ்வாறு இயங்கினாலும் சட்டசபையில் ஜெயலலிதா உருப்படியான காரியங்கள் ஏதுவும் பேசுவதில்லை” என்றார்.

Leave a Reply