உத்தரகாண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு. முதல்வர் ஹரிஷ் அரசுக்கு வெற்றி.

உத்தரகாண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு. முதல்வர் ஹரிஷ் அரசுக்கு வெற்றி.

uttarghandஉத்தரகண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் ஹரீஷ் ராவத் அரசு நீடிப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. இதனை எதிர்த்து முதல்வர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மே 10-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. இந்நிலைஇயில் ஹரீஷ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்ததால், 31 வாக்குகளைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக நேற்றைய தினமே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகவல் அளித்திருந்த போதிலும் சுப்ரீம் கோர்ட் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவித்தது. இந்த வாக்கெடுப்பில் ஹரிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர்  இந்த தகவலை தெரிவித்தார். முதல்வர் ஹரீஷூக்கு கிடைத்த இந்த வெற்றி மத்திய அரசுக்கு கிடைத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply