காஷ்மீரில் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை. முதலமைச்சர் கண்டனம்

காஷ்மீரில் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை. முதலமைச்சர் கண்டனம்

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில் காங்கிரஸ் பிரமுகர் குலாம் நபி பட்டேல் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முதல்வர் மெக்பூபா கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார்

ஜம்முகாஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கி வந்த குலாம் நபி படேல் என்பவர் நேற்று மதியம் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் புல்வாமா மாவட்டத்தின் முரன் சவுக் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குலாம் நபி படேல் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மூவரும் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே குலாம் நபி படேல் பரிதாபமாக மரணம் அடைந்தார். 2 பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஸ்ரீநகரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை

குலாம் நபி படேல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என முதலமைசர் மெகபூபா கடும் கண்டனம் வெளியிட்டார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், சுட்டுக்கொலை, குலாம் நபி பட்டேல், jammu kashmir, congress, Gulam Nabi patel

Congress leader Gulam nabi patil killed by terrttorist

Leave a Reply