லலித் மோடியின் குற்றச்சாட்டுக்களுக்கு ப.சிதம்பரம் பதில்.

pcலலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தில் சமீபத்தில் பேட்டியளித்த லலித்மோடி, ப.சிதம்பரம் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் செய்த குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய ஆதாரம் இருந்தால் லலித்மோடி தைரியமாக வெளியிடட்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்திய டுடே’ தொலைக்காட்சி சேனலுக்கு லலித் மோடி அளித்த பேட்டியில், “எனது பாஸ்போர்ட் தவறாக முடக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐ.மு. கூட்டணி அரசின் காழ்ப்புணர்ச்சியால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ப.சிதம்பரம் எனக்கு அதிகப்படியான நெருக்கடி அளித்தார். ஐ.பி.எல். சர்ச்சையில் சசிதரூர் பதவி விலகியதால் எனக்கு மேலும் நெருக்கடி அளிக்கப்பட்டது” எனக் கூறியிருந்தார்.

இது குறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். “லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும். உடனடியாக அந்தக் கடிதங்களை வெளியிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply