இந்திய அளவில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் டெபாசிட் தொகையைக்கூட திரும்ப பெற முடியாத பரிதாபமான நிலையை அடைந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக 39 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் கன்னியாகுமரியில் நின்ற வசந்தகுமார் தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அப்பொழுதான் அந்த வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் எல்.வசந்தகுமார் தவிர அனைத்து வேட்பாளர்களும் 6%க்கும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளனர்.
மேலும் புதுச்சேரியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நஜீம் டெபாசிட் இழந்தார். இதேபோல கூடங்குளம் அணு உலையின் எதிர்ப்பாளர் உதயகுமார் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் 4 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.