மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 3 பேர்கள் உள்பட 7 பேர்களையும் விடுதலை செய்வோம் என முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸார் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் உருவ பொம்மையையும் எரித்து அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. டெல்லி போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கியது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் இன்று சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘பிற சாதாரண குற்றவாளிகளை போல ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பிரபாகரன் உள்பட விடுதலைப்புலிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கனவே கூறியவர் என்றும், வரும் தேர்தலை மனதில் வைத்து நாடகம் ஆடுகிறார் என்றும் கூறினார்.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1jR9eqZ” standard=”http://www.youtube.com/v/UiZNzjbUqJo?fs=1″ vars=”ytid=UiZNzjbUqJo&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9884″ /]