30 தொகுதிகள் மட்டுமே. கறார் காட்டும் கருணாநிதி. காங்கிரஸ் வெளியேற திட்டமா?

30 தொகுதிகள் மட்டுமே. கறார் காட்டும் கருணாநிதி. காங்கிரஸ் வெளியேற திட்டமா?

congressதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு உண்டாகியுள்ளதாகவும், இதன் காரணமாக காங்கிரஸ், கூட்டணியை விட்டு வெளியே வரவும் வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தலைவர் கறாராக கூறிவிட்டதாகவும், காங்கிரஸ் தரப்பில் இருந்து 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், இதன் காரணமாக முதல்சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

30 தொகுதிகளை மட்டும் திமுகவிடம் இருந்து வாங்கி அதில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளில் மட்டும் ஜெயிப்பதற்கு எதற்கு கூட்டணி, பேசாமல் தனியாக 234 தொகுதிகளிலும் நிற்கலாம் என குலாம்நபி ஆசாத் இடம் இரண்டாம் கட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் இப்போதைக்கு திமுகவின் தயவு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கருதுவதாக பரபரப்புடன் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply