ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்: பிரிய மறுப்பதால் பரபரப்பு

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்: பிரிய மறுப்பதால் பரபரப்பு


அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை மருத்துவர்கள் பிரிக்க முடிவு செய்த நிலையில் அவர்கள் பிரிய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த Connecticut என்ற பகுதியில் கடந்த 16 வருடங்களுக்கு முன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளுக்கும் சேர்ந்து இரண்டு கால்கள், நான்கு கைகள் உள்ள இந்த இரட்டையர்களுக்கு மற்ற உறுப்புகள் அனைத்தும் ஒருவருக்கு உரியதாக உள்ளது.

இந்த குழந்தை பிறந்தவுடன் ஒருசில மணி நேரங்களில் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த குழந்தைகளுக்கு 16 வயது ஆகின்றது.

இந்நிலையில் பருவம் அடைந்த இவர்களில் ஒருவரை மட்டும் பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் மட்டுமே வாழ முடியும் என்பதால் அறுவை சிகிச்சைக்கு இந்த குழந்தைகள் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply