உடற்பயிற்சி உடலின் பாகங்கள் நன்றாக வேலை செய்யவும், உடல் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றது. உடலில் ஒரு புத்துணர்வு வந்து அந்த நாளின் வேளைக்கு நம்மை தயார் செய்யும் வண்ணம் இப்பயிற்சிகள் விளங்குகின்றன. உடற்பயிற்சிகளை தினமும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியமானதாகும். ஆனால் அளவிற்கு அதிகமான பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலில் வலி, பிடிப்புகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
குளிர்காலத்தில் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முற்பட்டால் எந்த ஒரு கவசமும் இன்றி, அதாவது மேலாடை, சாக்ஸ் மற்றும் தடியான காற்சட்டை ஆகியவற்றை போடாமல் செல்வது உடலுக்கு கேடு விளைவிக்கும். உடலில் உள்ள மூட்டு எலும்புகள் குளிர்காலத்தில் இறுகிய நிலையில் இருக்கும். தசைகளும் குளிரில் உலர்ந்து இருப்பதால் அதிக அளவில் பயிற்சி மேற்கொள்ளும் போது வலியும், வீக்கங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகையால் உங்களது சக்திக்கேற்ப உற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகும்.
நமது தசைகளையும் எந்த ஒரு பாதிப்புமின்றி பார்த்துக் கொள்ளும் வண்ணம் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இத்தகைய வலி மற்றும் வீக்கங்கள் வந்தாலும் அதை நாம் சரியாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவை நமக்கு பெரும் பிரச்சினைகளை தந்து விடும். நமது உடம்பில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் நிறைய சிக்கல்களை நாம் சந்திக்க நேரும். நாம் செய்யும் பயிற்சிகளின் இடையில் தேவைபடும் போது சிறிதளவு தண்ணீர் குடிப்பது சிறந்த வழியாகும்.
குளிர்காலத்தில் யோகா, நடனம் மற்றும் தியானம் ஆகிய வீட்டுக்குள் இருந்தபடி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அவை சிறந்த பலன்களை தருகின்றன. இந்த வழிமுறைகள் உடலை கட்டுகோப்பாக வைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன. பெருமளவில் பயிற்சி செய்து உடலை வருத்திக் கொள்ளாதீர்கள்.
தரையில் இருந்த படி செய்ய கூடிய பயிற்சிகளை செய்வது நல்லது. கூடிய வரையிலும் இயந்திரங்கள் மற்றும் எடைகளை தூக்கி அதன் மூலம் செய்யும் உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. குளிர் காலத்தில் செய்யக் கூடிய இத்தகைய பயிற்சிகளால், உடலில் வலிகள் ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலையும் காயங்களையும் ஏற்படுத்த நேரலாம்.