இந்திய துணை ராணுவப் படைகளான அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF), இந்தோ திபெத் எல்லை காவல் படை (ITBPF), சஷாத்ர சீமா பால் (SSB), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)படை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 62,390 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 62,390. இதில் 8,533 பணியிடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 24,588 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 22,517 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்திற்கு 2,138 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 – 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20, 200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் தேர்வு ஆணையம், இந்தத் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது. இதில் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவச் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இறுதித் தேர்வுகள் 04.10.2015 தேதிகளில் நடத்தப்பட்டு அடுத்த வருடம் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்:
தேர்வு மையம்: சென்னை
கோடு எண்: 8201
தேர்வு மையம்: மதுரை
கோடு எண்: 8204
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செல்லான் அல்லது நெட்பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். செல்லான் படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செலுத்து வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ssconline.ssc.nic.in http://ssconline2.gov.in என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பப் படிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். விரிவான விவரங்களை இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2015