ராஜீவ் காந்தி படுகொலையில் சந்தேகிக்கப்பட்ட சந்திராசாமி காலமானார்

ராஜீவ் காந்தி படுகொலையில் சந்தேகிக்கப்பட்ட சந்திராசாமி காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்பட்டவரும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அவர்களுக்கு நெருக்கமானவருமான சந்திரசாமி நேற்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 70

கடந்த 1991ஆம் ஆண்டு தமிழக சுற்றுப்பயணம் வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25ஆண்டுகளாக  பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி என்ற சாமியார் விசாரிக்கப்பட வேண்டியவர் என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அரசியல் காரணமாக அவரிடம் கடைசி வரை விசாரணை நடைபெறவே இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி காணப்பட்ட சந்திராசாமி இன்று காலமானார். ராஜீவ் காந்தியின் 26வது நினைவு நாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுசரிக்கப்பட்ட நிலையில் சந்திராசாமி காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply