பெண் நிருபரிடம் சர்ச்சைக்குரிய பதில் கூறிய கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர்.

பெண் நிருபரிடம் சர்ச்சைக்குரிய பதில் கூறிய கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர்.
eshwarappa
கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தற்போது பெண் நிருபரிடமும், மாநில மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கன்னட செய்தி தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்த கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா ”நீங்கள் ஒரு பெண். உங்களை யாராவது கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கூறினார்

ஈஸ்வரப்பாவின் இந்த சர்ச்சைக்குரிய பதிலுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், ‘தான் தவறான எண்ணத்தில் இந்த கருத்தை கூறவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார் ஈஸ்வரப்பா .

இந்நிலையில் அவருக்கு எதிராக நெருக்கடி முற்றியதன் காரணமாக நேற்று, ‘தான் கூறிய கருத்துக்கு ஈஸ்வரப்பா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”என்னிடம் தனியார் செய்தி தொலைக்காட்சி பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறினேன். தவறான எண்ணத்தில் நான் அப்படி பேசவில்லை.

மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நான் ஆதங்கப்பட்டு அந்த கருத்தைக் கூறினேன். இருந்தாலும், நான் கூறிய கருத்து அந்த பெண் நிருபரின் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருடைய வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன். மேலும், நான் கூறிய கருத்துக்காக மாநில மக்களிடமும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply