அன்னை தெரசா சேவையின் நோக்கமே மதமாற்றம்தான். ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு

MOTHER TERESAஅன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவையை மதமாற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ‘அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஓரே நோக்கமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மோகன் பாவத்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கிறிஸ்துவ அமைப்புகள் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

Leave a Reply