சமையல் கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.
14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 இருந்த நிலையில், தற்போது ரூ.750 உயர்த்தப்பட்டு ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்புத் தொகை ரூ.800-லிருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.