ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்த பெங்களூர் போலீஸ் கைது
இந்த நூற்றாண்டின் அதிசயமான கண்டுபிடிப்பு ஆன்லைன். இதன் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் எளிதில் நடந்து வந்தாலும் ஒருசிலர் இதை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் ஒரு போலீஸ் ஆன்லைன் மூலம் நூதனமான பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பெங்களூரில் சசிகலா சிறை உள்ள பகுதியில் பரப்பன அக்ராஹார காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் கரிபாசப்பா, ரகசியமாக பாலியல் தொழில் ஈடுபட்டு வந்ததோடு மேலும் இருவருடன் கூட்டணி அமைத்து பணம் சம்பாதித்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது கான்ஸ்டபிளை பணிநீக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள கான்ஸ்டபிள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மைக்கோ லே அவுட் காவல்துறை எல்லைக் குட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட வீட்டில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த பாலியல் மோசடி அம்பலமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து 3 பெண்கள், ஸ்வைப் மெஷின்கள் மற்றும் ஒரு பெரிய தொகையை கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.