கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி: இறுதிபோட்டிக்கு சிலி-அர்ஜெண்டினா தகுதி

football44வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலி நாட்டில் தற்போது விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் நாடான சிலி, பெரு அணியை வீழ்த்தி ஏற்கனவே  இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், சிலி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் அணி யார் என்பதை அறியும் முக்கிய போட்டியான  2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. 14 முறை சாம்பியன் பட்டம் பெற்ற  அர்ஜென்டினா அணி, இரண்டு தடவை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்று பராகுவே அணியுடன் மோதியது.

வழக்கம்போல் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் சக வீரர்கள் கோல் அடிக்க உற்சாகப்படுத்தினார். இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அர்ஜென்டினா கோல் மழை பொழிந்து இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

சிலி-அர்ஜெண்டினா மோதும் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு த்ரில்லிங்கை கொடுக்கும்படியான ஆட்டமாக இருக்கும் என கால்பந்து போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply