முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் இதுவரை வயதானவர்களை மட்டுமே பெரும்பாலும் தாக்கும் என்று கூறப்பட்டாலும், ஒரு சில இளைஞர்களையும் கொரோனா தாக்கி வந்தது என்பதும் தெரிந்ததே

இருப்பினும் கொரோனாவால் பலியானவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதும் ஒரு சிலர் நடுத்தர வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அரிதாகவே இளைஞர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தும் உள்ளனர்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு உணவு வைரஸ் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கர்நாடக மாநிலத்திலுள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷாஜிபானாடு என்ற பகுதியில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply