பாடகி வைத்த விருந்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சருக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது
அதே போல் எந்தவிதமான பார்ட்டிகள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அறிவுறுத்திய மத்திய அரசின் அமைச்சர் ஒருவரே பாலிவுட் பாடகி கனிகாகபூர் வைத்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்
இதனை அடுத்து தற்போது கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விருந்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஒருவர், உடனடியாக தன்னைத்தானே தனது தனிமைப்படுத்தி கொண்டு பரிசோதனையில் உள்ளார்
அவருக்கு கொரோனா இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனினும் அவரால் மற்றவருக்கு கொரோனா பரவக் கூடாது என்பதால் அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது