கொரோனாவுக்காக 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்

கொரோனாவுக்காக 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வரும் கொரோனா, தமிழகத்திலும் 3 பேருக்கு பரவியிருப்பதை அடுத்து, அந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அதி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு வாகனங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்காக புதிய கால் சென்டர் ஒன்றை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்

24 மணி நேரமும் மூன்று ஷிப்டுகளுடன் இயங்கும் இந்த கால்சென்டரில் அனுபவமுள்ளவர்கள் பணியாற்றவுள்ளனர். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து வருவதால் இந்த கால் சென்டரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

மேலும் முதல் காலை அட்டெண்ட் செய்து கொரோனா குறித்த சந்தேகம் கேட்ட ஒருவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கரே பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply