இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 17,073 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதன் எண்ணிக்கை 11,973 ஆக குறைந்துள்ளது
மேலும் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
கடந்த ஒரே நாளில் 27 பேர் கொரோனா நோய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
தற்போது 96,700 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.