கொரோனாவிற்கு எதிரான போர்: தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தியை சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவிற்கு எதிரான போர்: தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தியை சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து சோகமான செய்திகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இன்று எத்தனை வேகம் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டார்கள், எத்தனை பேர் மரணம் அடைந்தார்கள் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஒரு நல்ல செய்தியை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் இருந்து தமிழகத்திற்கு வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது முற்றிலும் குணமாகி உள்ளார். அவருக்கு இரண்டு முறை இரத்தப் பரிசோதனை செய்ததில் இரண்டுமே அவருக்கு நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இருப்பினும் அவர் தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிப்பார் என்றும் அவர் விரைவில் முழு 100% குணமடைந்தார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் அந்த இளைஞரை குணமாக்கிய மருத்துவ டீமுக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணம் அடைந்து வருவது தமிழ்நாட்டுக்கு நல்ல செய்தி மட்டுமின்றி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply