கடவுளுக்கும் பரவுகிறதா கொரோனா வைரஸ்: முக கவசம் அணிவிக்க அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு
கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களில் பலர் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்கின்றனர். இதனால் முககவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயில் கடவுளுக்கும் முக கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாக புகைப்படத்துடன் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அந்த கோவில் பூசாரி கூறியபோது கடவுளுக்கு எந்த நோயும் பரவாது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காசிவிசுவநாதர் சிலைக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவித்து உள்ளோம் என்று கூறியுள்ளார் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என்று பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்