12 பேருக்கு உருமாறிய கொரோனா! அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பி.எ 4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பி.ஏ 5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். நலமுடன் உள்ளனர்.