மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது.
ஆனால் இந்த கொரோனாவின் தாக்கம் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.பல்வேறு விலங்குகள் உயிரிழந்தன.
அரியானாவில் உள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
விலங்குகளுக்கான இந்த கொரோன தடுப்பூசிக்கு ‘அனோகோவாக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.