2 மேயர் பதவி உள்பட உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

India Electionsதமிழகத்தில் காலியாக இருந்த முன்று மேயர் பதவிகளில் திருநெல்வேலி மேயர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதி இருக்கும் கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 மேயர் பதவிகள் உள்பட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கியது.

மேலும் அரக்கோணம், கடலூர், விருத்தாசலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட மொத்தம் 530 பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட முகீய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டடன என்பது குறிப்பிடத்தக்கது.  அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இதற்கு, தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குச்சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. வருகின்ற 22 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Leave a Reply