உள்ளாட்சி தேர்தல். நேரடியாக களமிறங்கும் ஜெயலலிதா-கருணாநிதி

உள்ளாட்சி தேர்தல். நேரடியாக களமிறங்கும் ஜெயலலிதா-கருணாநிதி

Jayalalitha-Karunanidhiசட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் திமுக 89 இடங்களை பிடித்தது ஜெயலலிதாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தவறு உள்ளாட்சி தேர்தலில் நடைபெறக்கூடாது என்பதில் ஆரம்பத்திலேயே விழிப்புடன் இருக்க முடிவு செய்துள்ளார் ஜெயலலிதா.

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை சந்தித்த முதல்வர் உடனடியாக தமிழ்நாடு முழுக்க செயல்படுத்தப்படாமல், பாதியில் நிற்கும் திட்டங்களை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்குமாறும் அறிவுறுத்தியுள்ளாராம். அதுமட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி ஆணையாளர்களிடம் நேரடியாக அந்தந்த நகரங்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டு, அதைச் செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளராம்.

சட்டமன்ற தேர்தலைப் போலவே 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகளுக்கான வேட்பாளரை முதல்வரே நேரடியாக நேர்காணல் நடத்தி தேர்வு செய்யவுள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் ஒதுக்கவுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல் திமுகவிலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் ஆகியோர்களுடனும், ஸ்டாலின், பொன்முடியிடமும் ஆலோசனை செய்துள்ளாராம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினர்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டாம் என்றும் தேவைப்பட்டால் தனித்து நிற்கவும் தயங்க வேண்டாம் என்றும் கருணாநிதியிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாராம்

Leave a Reply