முன்னாள் தென்கொரிய அதிபர் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தென்கொரியா நாட்டின் அதிபராக இருந்த பெண் தலைவர் பார்க் கியுன் ஹை அவர்களின் நெருங்கிய தோழி சோய் சூன் சில். இவர் தென் கொரிய அரசில் சக்தி மிகுந்தவராக இருந்தார். இதனால் இவர் மீது பல்வேறு ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சோய் சூன் சில் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். முன்னதாக அரசு தரப்பு வழக்கறிஞர் அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வழக்கில், லாட்டி குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஷின் டாங் பின்னுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.