துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவு பெறுகிறது.
இதன் முதல் கட்டக் கலந்தாய்வில் மொத்தம் உள்ள 555 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பின. தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4,517 நிரம்பின.
பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம், பி.ஓ.டி. ஆகிய படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 2,143 காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.