500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணப்புழக்கம் குறைவாகவுள்ளதை சரிசெய்யும் விதமாக செல்லாத ரூபாய் ஐநுறு மற்றும் ஆயிரம் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் கிடைத்தாலும் அதை பயன்படுத்த சில்லரை தட்டுப்பாடு காரணமாக மக்கள் திணறுகின்றனர்
ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள ரூ.100, ரூ.50 ஆகியவற்றை முடிந்தளவு வெளியேற்றிவிட்டது. இனிமேல் புதியதாக அச்சிட்டால்தான் ரூ.100, ரூ.50 கிடைக்கும். இந்நிலையில் கோவில் உண்டியலில் மாதக்கணக்கில் தேங்கியிருக்கும் பணத்தை இனி வாரம் ஒருமுறை எண்ணி, உடனே வங்கியில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், இருக்கன்குடி, மதுரை, பழனி, ராமேஸ்வரம், சமயபுரம், ஸ்ரீரங்கம் திருச்செந்தூர் ஆகிய தமிழகத்திலுள்ள பிரசித்தபெற்ற கோவில்களில் மாதம் ஒருமுறை எண்ணப்பட்டு வந்த உண்டியல் காணிக்கைகளை வாரந்தோறும் எண்ணி வங்கியில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி, ஆட்சியர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.