தாய் இறந்ததையும் பொருட்படுத்தாமல் தாய் நாட்டிற்காக துப்புரவு பணியை தொடர்ந்த மகன்

தாய் இறந்ததையும் பொருட்படுத்தாமல் தாய் நாட்டிற்காக துப்புரவு பணியை தொடர்ந்த மகன்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துப்புரவாளர் பணியை செய்து வரும் ஒருவர் பணியில் இருக்கும்போது திடீரென அவரது தாயார் இறந்து விட்டதாக செய்திகள் வந்தது. இருப்பினும் அவர் விடுமுறையோ அல்லது அனுமதியோ பெற்று செல்லாமல் தொடர்ந்து அவர் தனது பணியை செய்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது அவர் வீட்டிற்குச் சென்று தாயின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். இதுகுறித்து அவர் கூறியபோது எனது தாய் இறந்த செய்தி எனக்கு காலை 8 மணிக்கே தெரியும். இருப்பினும் தாய் நாடு தற்போது தற்போது ஆபத்தில் இருப்பதால் தாய் நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய பணிகள் இருந்தது
எனவே தாயின் இறுதிச் சடங்குக்கு உடனே நான் செல்லவில்லை. எல்லோருக்கும் தாய் முக்கியம் தான், என்றாலும் எனக்கு தாய் நாடு அதைவிட முக்கியம் என்று அவர் கூறியது பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தியாவை ஆயிரம் கொரோனா வந்தாலும் அசைக்க முடியாது.

Leave a Reply