ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் கடல்சார் அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகள் தொடக்கம்

download (6)

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் கடல்சார் அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன என்று கல்லூரி தலைமை செயல் அலுவலர் கே.சுஜாதா பாலசுப்ரமணியன் கூறினார்.

இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியது:

இந்திய சில்லறை வணிகம் ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்று வருகிறது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய சில்லறை வணிகம் 5-ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதும், இந்தியர்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதும், பல பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த சூழல் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சரக்குகள் கையாளும் மேலாண்மை மற்றும் அது தொடர்பான தொழில்கள் பெருக வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் பெருகும்போது வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஜி.கே.எம். கடல்சார் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2 ஆண்டு எம்.பி.ஏ, லாஜிஸ்டிக், விநியோக மேலாண்மைப் படிப்பு, 3 ஆண்டு பி.பி.ஏ. லாஜிஸ்டிக், கப்பல் சரக்கு மேலாண்மை, பி.காம்.லாஜிஸ்டிக், கப்பல் சரக்கு மேலாண்மை, பி.எஸ்.சி.லாஜிஸ்டிக், தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு, படிப்புடன் தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கென பிரபல கப்பல் சரக்குகள் கையாளும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

Leave a Reply