ப.சிதம்பரம் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்: சிக்கலில் கார்த்திக் சிதமபரம்

ப.சிதம்பரம் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்: சிக்கலில் கார்த்திக் சிதமபரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தின் காவல் ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அவரது வழக்கறிஞர் தினசரி இரண்டு முறை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கார்த்திக்கு தினமும் வீட்டு உணவு கொண்டு வந்து கொடுக்க ப.சிதம்பரம் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் அவருக்கு தேவையான மருத்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி கொடுக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி தினமும் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அவரைச் சந்திக்கலாம் என்றும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட ஒருநாளில் கார்த்திக்கை முழுமையாக விசாரணை செய்ய முடியவில்லை என்ற சிபிஐயின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு மார்ச் 6 வரை காவலில் விசாரணை செய்ய அனுமதித்துள்ள நிலையில், அவரிடம் இருந்து முக்கிய கேள்விகளுக்கு பதிலை பெறும் முனைப்பில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

court allows lawyer to meet karti chidambaram twice a day

Leave a Reply