மது விற்பனை நேரம் குறைக்கப்படுகிறதா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
மது விற்பனை நேரத்தை குறைத்தால் மது விற்பனை குறையும் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது
இன்று 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்கக்கூடாது என்ற வழக்கில் கருத்து கூறிய நீதிபதிகள் மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை ஏன் மாற்றக்கூடாது என்று கேள்வி எழுப்பிய தமிழக அரசுக்கு இது குறித்து அறிவுறுத்தியுள்ளனர்
மேலும் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் தரக்கூடாது என்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்