உடம்பிற்கு பசும்பால் நல்லதா அல்லது எருமைப்பால் நல்லதா என்று குழம்பிப்போய் இருக்கீங்களா? அப்ப உடனே சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள். பசு மற்றும் எருமைப்பால் ஆகிய இரண்டுமே சத்துக்கள் நிறைந்தவை. உங்களுடைய தனிப்பட்ட உபயோகத்தைப் பொறுத்து இரண்டுமே கிடைக்கும் பட்சத்தில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பசும் பாலை விட ஆட்டுப் பால் குடிப்பது மிகவும் நல்லது… ஏன் தெரியுமா?
இதைப் பற்றி முடிவெடுக்கும் முன்னர், பசு மற்றும் எருமைப்பாலில் உள்ள சத்துக்களின் அளவினை ஒருமுறை பார்ப்பது நல்லது. கீழே தரப்பட்டுள்ள அளவுகள் 100 மிலி பாலிற்கான அளவுகள்.
எருமைப்பால்:
97 கலோரிகள், புரோட்டீன் 3.7 கிராம், கொழுப்பு 6.9 கிராம், தண்ணீர் 84 சதவிகிதம், லாக்டோஸ் 5.2கிராம், கனிமச்சத்து 0.79 கிராம்.
பசும்பால்:
61 கலோரிகள், புரோட்டீன் 3.2 கிராம், கொழுப்பு 3.4 கிராம், தண்ணீர் 90 சதவிகிதம், லாக்டோஸ் 4.7 கிராம், கனிமச்சத்து 0.72 கிராம்
நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் பசும்பால் உங்களுக்கு ஏற்றது. 100 மிலி எருமைப்பாலில் காணப்படும் 97 கலோரிகளை ஒப்பிடும் போது அதே அளவு பசும்பாலில் 61 கலோரிகள் மட்டுமே உள்ளது. பசும்பாலைப் போல (3.4 கிராம்) எருமைப்பாலில் ஏறக்குறைய இருமடங்கு கொழுப்பு நிறைந்துள்ளது (6.9 கிராம்).
தினமும் லிட்டர் கணக்கில் பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
எனவே உங்கள் உடம்பில் சதை போட விரும்பினால், அதற்கு எருமைப்பால் ஏற்றது. நீங்கள் பசும்பாலை அருந்தினால் உங்களுக்கு 3.2 கிராம் புரோட்டீனும், 3.4 கிராம் கொழுப்பும், 61 கலோரிகளும் கிடைக்கும். அதே வேளையில் நீங்கள் எருமைப்பாலைக் குடித்தால், உங்களுக்கு 3.4 கிராம் புரோட்டீனும் (பசும்பாலில் உள்ள ஏறக்குறைய அதே அளவு), 6.9 கிராம் கொழுப்பும் (பசும்பாலில் உள்ளது போல் இருமடங்கு) 97 கலோரிகளும் (பசும்பாலைப் விட 50 சதவிகிதம் அதிகம்) கிடைக்கும்.
உங்களுக்கு உடல் எடை போட்டு சதைப் பற்றுடன் இருக்க விரும்பினால், உங்களுக்கு எருமைப்பால் நல்லது. பசும்பாலை ஒப்பிடுகையில் எருமைப்பாலில் 15 சதவிகிதம் கூடுதல் புரோட்டீன் உள்ளது.
உங்களுக்கு ஜீரணக் குறைபாடுகள் இருப்பின் பசும்பாலே ஏற்றது. எருமைப்பால் பசும்பாலை விட அடர்த்தியானது. ஏனென்றால் பசும்பாலில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.