இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம். பணிகளை தொடக்கியது பொதுப்பணித்துறை

இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம். பணிகளை தொடக்கியது பொதுப்பணித்துறை

abdul kalamஇந்திய இளைஞர்களின் வழிகாட்டியாகவும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அவருக்கு ராமேஸ்வரத்தில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளது.

இராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் அமைக்கும் பணியை மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். நேற்று காலை கலாம் நினைவிடத்திற்கு மதுரையில் இருந்து வந்த மத்திய பொதுப்பணி துறை நிர்வாக பொறியாளர் கணேசன், இளநிலை பொறியாளர் பைசர்கான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமண்டபம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். முதல்கட்ட ஆய்வுக்கு பின்னர் விரைவில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

முதல் கட்டமாக கலாம் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் மொத்த அளவு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கும் நினைவிடத்திற்கும் இடையேயான உயரம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும், இந்த ஆய்வின் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் விரைவில் அளிக்கப்படும் என்றும், அதன்பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply